யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
இந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழைகிறது பானசோனிக்
- பி. முகிலன்
நுகர்வோருக்கான மின்னணு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பானசோனிக் இந்தியா நிறுவனம், இந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழைய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் சந்தை கொண்ட நாடாக விளங்குகிறது இந்தியா.

நோக்கியா , சாம் சங், மோட்டாரோலா, எல்ஜி, எரிக்சன் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்திய மொபைல் சந்தையில் நுழைந்து கோலோச்சுகின்றன.

ஆனால், ஏற்கனவே இந்திய மொபைல்போன் சந்தையில் ஒரு முறை நுழைந்திருந்த பானசோனிக் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்திருந்ததால், கடந்த 2006 ம் ஆண்டு இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது.

பானசோனிக் தயாரிப்பு மொபைல்போனுக்கான இந்திய ' பிராண்ட் அம்பாசிடர் ' ஆக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாச பாசு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வருகிற நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால் இந்திய மொபைல்போன் சந்தையில், அந்த போனுக்கான தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு பானசோனிக் நிறுவனம் தனது தயாரிப்பு மொபைல்போன்களுடன் மீண்டும் இந்திய சந்தையில் நுழைய திட்டமிடுள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் 3ஜி ஜிஎஸ்எம் ரக போன் உள்ளிட்ட பல்வேறு ரக தயாரிப்பு போன்களுடன் இந்திய சந்தையில் பானசோனிக் நுழையும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி சந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், சீனா அல்லது இந்தோனேஷியாவில் உள்ள தனது சர்வதேச தயாரிப்பு மையத்திலிருந்து மொபைல்போன்களை இறக்குமதி செய்து இந்திய சந்தையில் பானசோனிக் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏர் டெக்கான் - கிங் ஃபிஷர் இணைகிறது
இளைஞர்களுக்கு இன்னும் கனவாகவே இருக்கும் வேலை...!
இந்திய கணினி சந்தை 25 % வளர்ச்சி
திறன் படைத்த ஐ.டி. வல்லுனர்களுக்காக ஏங்கும் நிறுவனங்கள்!
ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்பட்ட சாதகம்
ரூ.10 ஆயிரம் கோடிக்கு எஸ்பிஐ பங்கு வெளியீடு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace