யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
ஏர் டெக்கான் - கிங் ஃபிஷர் இணைகிறது
- பி. முகிலன்
டெக்கான ஏவியேஷன் நிறுவனமும் , விஜய மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒன்றாக இணைய உள்ளன.

இந்த இணைப்பு குறித்து டெக்கான் ஏவியேஷன் மற்றும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு ஒருமனதாக முடிவு செய்தது.

இரு நிறுவனங்களின் இணைந்த புதிய நிறுவனத்தின் பெயர் அநேகமாக ' கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ' என்ற பெயரிலேயே இருக்கும் என இரு நிறுவனங்களுக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு நிறுவனங்களும் கைகோர்ப்பதன் மூலம் புதிதாக உருவாக உள்ள ' கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ' நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும்.

அதேபோன்று விஜயமல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், வெளிநாட்டு போக்குவரத்து சேவையில் நுழைவதற்கான வாய்ப்பையும் இந்த இணைப்பு நடவடிக்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இணைப்புக்கு பின்னர் உருவாக இருக்கும் புதிய விமான நிறுவனத்திற்கு விஜய மல்லையாதான் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பார்.

துணை தலைவராக, இந்தியாவில் குறைந்த விமானக் கட்டணத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த தற்போதைய டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தின் ஜி.ஆர்.கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முழு பங்குகளையும் கொண்டிருக்கும் விஜயமல்லையாவின் ' யுபி ஹோல்டிங்ஸ் ' நிறுவனம், டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தின் 46 சதவீத பங்குகளை ஏற்கனவே தன்வசம் வைத்திருந்தது.

இந்நிலையில், இணைப்புக்குப் பின்னர் உருவாகும் புதிய நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை ' யுபி ஹோல்டிங்ஸ் ' நிறுவனமே வைத்திருக்கும் என தெரிகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த இணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய இரு நிறுவனங்களையும் இணைப்பது தொடர்பாக, தொழில் முறை சேவை நிறுவனம் ஒன்று அளித்த திட்ட அறிக்கைக்கு பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த 2006 - 07 ம் நிதியாண்டின் முடிவில் டெக்கான் ஏவியேஷன் ரூ. 419 கோடியும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ. 577 கோடியும் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்தே மேற்கூறிய இணைப்பு முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அறிக்கை கோரப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக இணைப்புக்குப் பின்னர் உருவாகும் புதிய நிறுவனம் ' கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' என்ற பெயரிலேயே இயங்கினாலும், இயக்கப்படும் விமானங்கள் டெக்கான் மற்றும் கிங் ஃபிஷர் ஆகிய இரண்டு தனித்தனி வர்த்தக பெயர்களிலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இளைஞர்களுக்கு இன்னும் கனவாகவே இருக்கும் வேலை...!
இந்திய கணினி சந்தை 25 % வளர்ச்சி
திறன் படைத்த ஐ.டி. வல்லுனர்களுக்காக ஏங்கும் நிறுவனங்கள்!
ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்பட்ட சாதகம்
ரூ.10 ஆயிரம் கோடிக்கு எஸ்பிஐ பங்கு வெளியீடு
ஜவுளி ஏற்றுமதி வீழ்ச்சியால் வேலை இழப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace