|
| கட்டணமில்லா படப்பிடிப்பு:பாலிவுட்டுக்கு பின்லாந்து அழைப்பு | |
பின்லாந்திலுள்ள இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கட்டணமில்லா படப்பிடிப்பு நடத்திக் கொள்ள வருமாறு பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு பின்லாந்து அழைப்பு விடுத்துள்ளது.
பின்லாந்தில் சுற்றுலாத் துறையினரால் தடம் பதிக்கம்படாத இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக உள்ளன.பின்லாந்தில் உள்ள மொத்த நிலப்பகுதியில் 68 சதவீதம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த 68 சதவீத நிலப்பகுதியும் மரங்கள், செடிகள் நிறைந்த வனப்பகுதியாகும்.
மேலும் இந்த வனப்பகுதிகளில் 2 லட்சம் ஏரிகள் உள்ளன.வர இருக்கும் கோடைகாலத்தை முன்னிட்டு இந்த வனப்பகுதிகளில் இரண்டு மாத காலத்திற்கு 24 மணி நேரமும் மின் விளக்கு வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பை பாலிவுட் தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் பயன்படுத்திக்கொண்டு,தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கான படப்பிடிப்பை பின்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலும், பொது இடங்களிலும் நடத்திக் கொள்ளலாம் என அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
அதே சமயம் இந்த படப்பிடிப்புக்காக கடடணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும்,இலவசமாகவே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டின் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பாலிவுட் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் பின்லாந்த் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்களின் நேரடி ஆலோசனை கூட்டத்திற்கு கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.'ஃபைண்ட் 2007'என்ற பெயரில் அடுத்த மாதம் கோவாவில் இந்த கூட்டம் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்த்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|