யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
இந்திய சுற்றுலாத்துறையின் ஏற்றமும் இடர்களும்
- எஸ்.சரவணன்
இந்திய சுற்றுலாத்துறை தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆயினும், இத்துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக சில இடர்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாத்துறை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. 2006-ம் ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே இத்துறையின் வளர்ச்சியை அறியலாம்.

இந்தியாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்த 300 பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றை 'பசிபிக் ஏரியா டிராவல் அசோசியேஷன்' அமைப்பு, 'இன்டர்னேஷனல் டூரிஸம் எக்ஸ்சேஞ்ச்' மூலம் வெளியிட்டுள்ளது.

அதில், உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் மட்டும் 40 லட்சத்து 40 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவிகித வளர்ச்சியாகும்.

இந்த வளர்ச்சிக்கு அரசின் 'இன்கிரெடிபிள் இந்தியா' விளம்பரம் பக்கபலமாக இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அந்தக் கட்டுரை, நாட்டின் சுற்றுலாத்துறையில் உள்ள இடர்பாடுகளையும் மேற்கோள்காட்டியுள்ளது.

மேலும், போதுமான உட்கட்டமைப்பு, இந்திய விமான நிலையங்களில் உள்ள குறைபாடுகள், போதிய ஓட்டல் வசதியின்மை போன்றவை இந்திய சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடைய தடையாக உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய இடர்பாடுகள் களையப்படும் பட்சத்தில், உலக நாடுகளைக் கவரும் இந்திய சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உலகக் கோப்பை : பாதிக்கப்படும் இங்கிலாந்து பொருளாதாரம்
இன்னும் ஒரு வருடத்திற்கு சிமென்ட் விலை உயராது
மோட்டார் சைக்கிளை முந்தும் கார் விற்பனை விகிதம்
உலக பணக்காரர்கள் வரிசையில் மிட்டலுக்கு ஐந்தாவது இடம்
எரி சக்தி திட்டங்களில் இந்தியா-ஜப்பான் கூட்டு முதலீடு
கொண்டைக் கடலை ஏற்றுமதிக்கு கிரீன் சிக்னல்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace