யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
உலகக் கோப்பை : பாதிக்கப்படும் இங்கிலாந்து பொருளாதாரம்
- முகிலன்
அடுத்தவாரம் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினால் பிரிட்டனின் பொருளாதார உற்பத்தி பாதிக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் பொருளாதார உற்பத்திக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுவது இயல்பானதுதான்.அந்த கேள்விக்கு விடையளிக்கிறது லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று.

மேற்கிந்திய தீவுகளில் அடுத்த வாரம் தொடங்க உள்ள உலகக் கோப்பை போட்டி ஏறக்குறைய 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில்,கிரிக்கெட் போட்டியை காண்பதில் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு தாயகமே இங்கிலாந்துதான் என்பதால், அங்குள்ள மக்களிடம் கிரிக்கெட் ஆர்வம் மற்ற நாடுகளைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்பதில் வியப்பில்லை.

எனவே இந்த ஆர்வம்,அங்குள்ள சாதாரண தொழிற்சாலை பணியாளர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள்,பங்குச் சநதை புரோக்கர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக உற்பத்திகள்,பணிகள் பாதிக்கப்பட்டு,அதனால் இங்கிலாந்தின் பொருளாதார உற்பத்தி சுமார் 270 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு பாதிக்கப்படும் என லண்டனில் உள்ள சுயேச்சை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்னும் ஒரு வருடத்திற்கு சிமென்ட் விலை உயராது
மோட்டார் சைக்கிளை முந்தும் கார் விற்பனை விகிதம்
உலக பணக்காரர்கள் வரிசையில் மிட்டலுக்கு ஐந்தாவது இடம்
எரி சக்தி திட்டங்களில் இந்தியா-ஜப்பான் கூட்டு முதலீடு
கொண்டைக் கடலை ஏற்றுமதிக்கு கிரீன் சிக்னல்
ஐடி துறையில் 3,80,000 பேருக்கு காத்திருக்கும் வேலை
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace