|
| மோட்டார் சைக்கிளை முந்தும் கார் விற்பனை விகிதம் | |
நாட்டின் மோட்டார் சைக்களின் விற்பனை விகிதத்தைக் காட்டிலும், கார் விற்பனை விகிதம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையான வாகனங்களின் அளவை கணக்கிட்டுப் பார்த்தாலே இந்த உண்மை புலானாகும்.
சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபாக்சுரர் வெளியிட்டுள்ள கணக்கின்படி, 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு பயணிகள் கார்களின் அளவு 92,594. இது ,முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 63,213 ஆக இருந்துள்ளது.
ஆக,கார் விற்பனை விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 46 சதவிகிதம் உயர்ந்திருப்பதை அறியலாம்.
அதேநேரத்தில், கடந்த பிப்ரவரியில் 5,16,410 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன. இதே காலகட்டதில் முந்தைய ஆண்டில் 4,92,116 மோட்டார் சைக்கிள்கள் விறபனையாயின. தற்போது இதன் விற்பனை விகிதம் 4.93 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மோட்டார் சைக்கிளின் விற்பனை அதிகரித்திருந்தாலும், கார் உடன் ஒப்பிடும்போது விறபனை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளன என்பது தெளிவாகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|