யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
உலக பணக்காரர்கள் வரிசையில் மிட்டலுக்கு ஐந்தாவது இடம்
- திருப்பதி
இந்த ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை 'போர்ப்ஸ்'என்ற அமெரிக்க இதழ் வெளியிட்டுள்ளது. இதில்,உலக பணக்காரர்கள் 946 பேரில் இந்தியர்கள் 36 பேர் இடம் பிடித்துள்ளனர். மொத்த பணத்தின் மதிப்பு ரூ 191 பில்லியன் டாலர்கள்.

ஸ்டீல் மேக்னட் என்று வர்ணிக்கப்படும் லட்சுமி நிவாஸ் மிட்டல் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் ஐந்தாவது இடத்தில் பிடித்து ஆச்சர்யமூட்டியிருக்கிறார். இவரிடத்தில் 32 பில்லியன் டாலர் சொத்து வைத்திருப்பதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.

20.1 பில்லியன் டாலருடன் ரிலையன்ஸ் தொழிற் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 14வது இடத்திலும், அனில் அம்பானி 18.1 பில்லியன் டாலருடன் 18வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முறையே இரண்டாது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறையச் சேர்ந்த விப்ரோ நிறுவன தலைவர் ஆஜிம் பிரேம்ஜி 17.1 பில்லியன் டாலருடன் 21 இடத்தில் உள்ளார்.

டிஎல்எப் நிறுவனர் கே.பி.சிங் 10 பில்லியன் டாலருடன் 62வது இடத்திலும், பார்தி தொலைத்தொடர்பு அதிபர் சுனில் பாரதி மிட்டல் குடும்பம் 69 வது இடத்திலும் உள்ளனர்.

இன்னொரு ஆச்சரியமிக்க தகவல் என்னவெனில், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத வகையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஜப்பானை விட இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஜப்பானை விஞ்சும் வேகத்தில் இந்தியாவில் தொழில்துறை முன்னேறி வருகிறது என்ற உண்மை வெட்டவெளிச்சமாகிறது.

இளம் தலைமுறையினர் தொழில் துறையில் இறங்கியிருப்பதும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எரி சக்தி திட்டங்களில் இந்தியா-ஜப்பான் கூட்டு முதலீடு
கொண்டைக் கடலை ஏற்றுமதிக்கு கிரீன் சிக்னல்
ஐடி துறையில் 3,80,000 பேருக்கு காத்திருக்கும் வேலை
மொபைல் போன் உபயோகத்தில் பாய்ச்சல் காட்டும் சீனா
'ஸ்விப்ட்'டுக்கு போட்டியாக 'கெட்ஸ் பிரிமியர்'
தமிழகம் முழுவதும் 60 பழ சேமிப்புக் கிடங்குகள்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace