|
| எரி சக்தி திட்டங்களில் இந்தியா-ஜப்பான் கூட்டு முதலீடு | |
எண்ணெய் வயல் மற்றும் நிலக்கரி திட்டங்களில் இந்தியாவும் ,ஜப்பானும் கூட்டு முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
எரி சக்தியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் உலக அளவில் ஜப்பான் 4 வது இடத்திலும், இந்தியா 5 வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் ,எண்ணெய் வயல் மற்றும் நிலக்கரி திட்டங்களில் இந்தியாவும்,ஜப்பானும் கூட்டு முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளன.
மேலும் நிலக்கரி மற்றும் அணு சக்தி மூலமான மின் திட்டங்களுக்குரிய தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன.
இது தொடர்பாக ஜப்பான் வர்த்தக துறை அமைச்சர் அகிரா மற்றும் இந்திய திட்டக்கமிஷன் துணை தலைவர் அலுவாலியா ஆகியோர் வருகிற ஏப்ரல் மாதம் சந்தித்துப்பேச உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர் .
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | |
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|