|
| கொண்டைக் கடலை ஏற்றுமதிக்கு கிரீன் சிக்னல் | |
பணவீக்கம் போன்ற காரணங்களினால் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட காபுலி சென்னா என்றழைக்கப்படும் வெள்ளை நிற கொண்டைக் கடலையை மீண்டும் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக கோதுமை போன்ற உணவு தானியங்களை இறக்குமதி செய்யவும்,வெள்ளைக் கொண்டக்கடலை போன்ற பயிறு வகைகளின் பற்றாக்குறையால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு வெள்ளைக் கொண்டக்கடலையின் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், பணவீக்கம் சற்று குறைந்திருப்பதாலும் இதன் மீதான தடை தற்போது முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்தே துவங்கிவிட்டன என்கிறது மத்திய அமைச்சரவை வட்டாரங்கள்.
வெள்ளைக் கொண்டக்கடலையின் விலை மத்திய பிரதேசத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.அதே சமயம் ஆந்திராவில் குவின்டாலுக்கு ரூபாய் 2 ஆயிரம் குறைந்துள்ளது.
ஏற்றுமதிக்கான தடை தளர்த்தப்பட்டிருப்பதால் வெள்ளைக் கொண்டக்கடலை விளைச்சலை நம்பி இருக்கும் விவசாயிகளிடையே மகிழ்ச்சி பொங்குகிறது என்றே சொல்லலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | |
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|