|
| ஐடி துறையில் 3,80,000 பேருக்கு காத்திருக்கும் வேலை | |
இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களினால் நடப்பு நிதியாண்டில் 3,80,000 பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும்,தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சேவையளிக்கும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதனால் இந்த நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை தொடர்பான வேலைகளுக்கு தேவைப்படுவோர் எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில் மட்டும் 3,80,000 மாக இருக்கும் என இது தொடர்பாக ஆய்வு நடத்திய இந்திய தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு 1,80,000 பேரும் ,தகவல் தொழில் நுட்ப சேவை பிரிவில் 2 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான விப்ரோவுக்கு 28,000 பேரும்,சத்யம் கம்யூட்டருக்கு 20,000 பேரும்,டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு 35,000 பேரும்,இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு 30,0000 பேரும் நடப்பு நிதியாண்டில் தேவைப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | |
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|