|
| மொபைல் போன் உபயோகத்தில் பாய்ச்சல் காட்டும் சீனா | |
மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் ,2010 ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 600 மில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் குறைந்து வரும் மொபைல் போன்களின் விலை மற்றும் பேசுவதாற்கான கட்டண குறைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவை போன்று சீனாவிலும் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
100 பேருக்கு 45 பேரிடம் சீனாவில் தற்போது மொபைல் போன் உள்ளது .இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவில் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 520 மில்லியனை எட்டிவிட வாய்ப்புள்ளது . கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 460 மில்லியனாக இருந்தது .
இந்நிலையில்,சீனாவில் லேண்ட் லைன் போன் கட்டணத்தை விட செல்போனில் பேசுவதற்கான கட்டணம் குறைவாக இருப்பது ,எங்கு சென்றாலும் பேசிக் கொள்ளமுடியும் என்ற வசதி போன்ற காரணங்களால் செல்போனுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக வருகிற 2010 ம் ஆண்டில் சீனாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 600 மில்லியனை தொட்டுவிடும் என அந்நாட்டு தகவல் தொழில் நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|