|
| 'ஸ்விப்ட்'டுக்கு போட்டியாக 'கெட்ஸ் பிரிமியர்' | |
ஆரோக்கியமான போட்டிதான் அபாரா வளர்ச்சிக்கு வழிகாட்டி என்பது போல தொழில் நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் போட்டியால் நாள்தோறும் புதுவித கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்க முடிகிறது.
கார் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் இரு பெரிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த தொழில்போட்டியை இதற்கு நல்ல உதாரணமாக சொல்ல முடியும்.
அந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று மாருதி மற்றும் ஹூண்டாய் கார் நிறுவனம். மாருதி கார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 'ஸ்விப்ட்' கார் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நம்மில் பலர் அதனை பயன்படுத்திக் கொண்டும் இருக்கலாம்.
இந்த காருக்கு போட்டியாக புதிய காரை தயாரிக்க வேண்டும் என பகீரதபிரயத்தனம் செய்தது ஹூண்டாய் கார் நிறுவனம். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.
ஸ்விப்ட்டுக்கு போட்டியாக 'கெட்ஸ் பிரிமியர்' என்ற பெயரில் புதிய காரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தனது போட்டியாளரான மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் காரில் என்னென்ன வசதிகள் குறைவாக உள்ளன என்பதை கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்யும் வகையிலும்,அதை விட சிறப்பு வசதிகளுடனும் இந்த கெட்ஸ் காரை ஹூண்டாய் தயாரித்துள்ளது.
1.1 லிட்டர், 1.3 லிட்டர் என இரண்டு விதமான பெட்ரோல் இயந்திரங்களுடன் இந்த புதிய கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் கெட்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என பெருமை பொங்க சொல்கிறார் ஹூண்டாய் நிறுவன இந்திய இயக்குனர் ஹீம்.
காரின் விலை குறித்து கேட்டால்,சந்தையில் போட்டி நிலவுவதால் அது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது என கூறி மறுத்துவிட்டார்.
எப்படியோ, அந்நிய நிறுவனங்களின் படையெடுப்பாலும், அவர்களுக்கு இடையேயான தொழில்போட்டியினாலும் இந்தியர்கள் பயன்பெறுவது நிச்சயம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|