 | | மேஷம் | சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடிவரும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் வாரமிது. வேற்று மதத்தினரால்,மொழியினரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.சம்பளப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்கிழக்கு
|
|
|
 | | ரிஷபம் | சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வெற்றியுண்டு.வீட்டை விரிவுபடுத்துவீர்கள். புது எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும்.பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் வாரமிது.பிள்ளைகளுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு அதிஷ்ட திசை : வடக்கு
|
|
|
 | | மிதுனம் | பிள்ளைகளால் வீண்அலைச்சல், டென்ஷன், கொஞ்சம் செலவுகளும் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு முக்கியமான செலவை மட்டும் செய்யப் பாருங்கள். மாணவர்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.உடல்நலம் பாதிக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களுக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை வந்துபோகும்.
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம் அதிஷ்ட திசை : கிழக்கு
|
|
|
 | | கடகம் | அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றி குறைகூற வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும்.கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை அதிஷ்ட திசை : வடக்கு
|
|
|
 | | சிம்மம் | பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவு உண்டு. வெற்றிக் கனியை பறிக்கும் வாரமிது.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஊதா அதிஷ்ட திசை : வட மேற்கு
|
|
|
 | | கன்னி | ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும்.புது வேலை கிடைக்கும்.வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.வேலையாட்களை பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.யதார்த்தமான அணுகுமுறை தேவைப்படும் வாரமிது.
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சிவப்பு அதிஷ்ட திசை : வடகிழக்கு
|
|
|
 | | துலாம் | வீட்டை மாற்றியமைப்பீர்கள்.வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.மனதிற்குப் பிடித்தமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
அதிஷ்ட நிறங்கள் : ஊதா,ஆரஞ்சு அதிஷ்ட திசை : மேற்கு
|
|
|
 | | விருச்சிகம் | மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் தொந்தரவு விலகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்பார்.
அதிஷ்ட நிறங்கள்: பச்சை, இளம் சிவப்பு அதிஷ்ட திசை : வடகிழக்கு
|
|
|
 | | தனுசு | உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். போராட்டங்களுக்கு இடையே வெற்றிபெறும் வாரமிது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஊதா அதிஷ்ட திசை :கிழக்கு
|
|
|
 | | மகரம் | பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவு உண்டு. வெற்றிக்கனியை பறிக்கும் வாரமிது. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.
அதிஷ்ட நிறங்கள்: இளம் சிவப்பு, ஆரஞ்சு அதிஷ்ட திசை : வடக்கு
|
|
|
 | | கும்பம் | மாணவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.முற்பகுதியில் முன்னேறும் வாரமிது.பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனை, செலவுகள் குறையும்.உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.தாய்வழி உறவினர்களிடையே வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.
அதிஷ்ட நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு அதிஷ்ட திசை : தெற்கு
|
|
|
 | | மீனம் | சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத்துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும்.முன்கோபம்,சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய வாரமிது. பெண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும்.வார முற்பகுதி நன்றாக இருப்பதால் தடைகள் உடைபடும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட நிறங்கள்: பச்சை,ஆரஞ்சு அதிஷ்ட திசை : மேற்கு
|
|
|