யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
தனுஷ்
WD
பிறந்த தேதி : பிப்ரவரி 25, 1982

சினிமா ஹீரோக்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்; இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தகர்த்தவர்களில் லேட்டஸ்ட் உதாரணம் தனுஷ்.

ஒல்லிப்பிச்சான் உடம்பு, பிசிறடிக்கும் குரல், ஒட்டிய கன்னம் என தனக்கு பாதகமாக இருந்த அனைத்தையும், தனது கடுமையான உழைப்பின் மூலம் சாதகமாக உயர்த்திக் கொண்டவர்.

இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட தனுஷ், புதிய நபர்களிடம் நட்பு பாராட்ட தயங்குவார். ஆனால், நண்பர் ஆகிவிட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் மறக்காதவர்.

உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் இவர், இரக்கக்குணம் கொண்டவர். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.

எதிலும் உறுதியாக இல்லாதது, அடிக்கடி முடிவுகளை மாற்றுவது, சிறிய விஷயங்களுக்காக மூட்-அவுட் ஆவது போன்றவை இவரது மைனஸ்.

இந்த முரண்பாடான குணாதிசயங்கள் தனுஷுக்கு மட்டுமல்ல; பிப்ரவரி 25ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும்.

ஜனவரி 2009-க்கான பலன்கள்:

தொடர் வெற்றிகள் மகிழ்ச்சி தரும். புதிய புதிய ஒப்பந்தங்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும். புதிய வெற்றியால் புத்துணர்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

தொழிலில் பிறரது பொறாமைக்கு ஆளாக நேரிடும். புதிய ஒப்பந்தங்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.

தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மூன்றாவது நபர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

தனுஷுக்கு தன்னம்பிக்கை தரும் எண்கள் : 1 மற்றும் 3.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏ.ஆர்.ரஹ்மான் (பிறந்த தேதி: ஜன. 6)
அமீர்கான்
விஜயகாந்த்
உமர் அப்துல்லா (மார்ச் 10, 1970)
ஷங்கர்
ராதிகா சரத்குமார்
செய்திகள்
தேசியம் - நாட்டின் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஓட்டுனர் உரிமத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொண்டார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...