|
| ராதிகா சரத்குமார் | |
பிறந்ததேதி: 21 செப்டம்பர் 1963.
கடந்த கால கதாநாயகிகளில் தமிழ் சினிமாவில் இன்னும் கோலோச்சிக் கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். அழகு, அறிவு, துணிச்சல் மற்றும் ஆளுமை திறன் மிக்க பெண்மணி இவர்.
ஓர் நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதோடு நின்றுவிடாமல், சின்னத்திரை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதை வெற்றிகரமான நடத்திக்கொண்டிருக்கும் மிகச்சிறந்த பெண் தொழிலதிபர்.
பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் வந்தவர் என்பதால் அடிப்படையிலேயே அரசியல் ஆர்வம் உள்ளவர். திமுக ஆதரவாளர், அதிமுக உறுப்பினர் என்பதை எல்லாம் தாண்டி, இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர்.
எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், எதையும் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற பிடிவாதம், வெற்றிக்காக முழு மூச்சாய் உழைப்பது, அதற்காக இறுதிவரை போராடுவது போன்றவை இவரது வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சாதகமான அம்சங்கள். ஆண்களுக்கு நிகரான துணிச்சல் என்பது இவருக்கு கூடுதல் ப்ளஸ்.
எக்கச்சக்கமான சர்ச்சைகளில் சிக்கியது, அதீத கோபம், திடீர் திடீர் என முடிவுகளை மாற்றுவது இவரது மைனஸ்.
இந்த இருவேறு குணாதிசயங்கள் ராதிகா சரத்குமாருக்கு மட்டுமல்ல; செப்டம்பர் 21ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும்.
2008 - டிசம்பர் மாத பலன்கள்:
கலைத்தொழிலில் சீரான வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கும். இதுவரை நம்பிக்கையாக இருந்த சிலர் அதிருப்தியால் வெளியேறுவர்.
ஓய்வில்லாத உழைப்பு, களைப்பு தரும். இனி அரசியல் மேடைகளில் ஆக்ரோஷமாக முழங்க வேண்டியதிருக்கும். ஆனால், உடல் நிலை சிரமம் தரும்.
தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களால் சிக்கல் வரும். குடும்பத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அரசியல் பாதையில் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
'அரசி'க்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை வரும் 21ம் தேதி இலங்கை... |
| |
|
|
|
|
 | | | பூ - விமர்சனம் | | பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்... |
| |
|
|
|
|
|
|
|