யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
மகேந்திரசிங் தோனி
- பெரு
Dhoni
AP
பிறந்த தேதி : 7 ஜூலை 1981

இன்றைய தேதியில் விளையாட்டுத் துறையில் திறமையும், அதிர்ஷ்டமும் ஒரு சேர பெற்ற ஒரே நபர் மகேந்திரசிங் தோனி.

'தோனி கேப்டன் பொறுப்பு ஏற்றால், ஆட்டத்தில் வெற்றி நிச்சயம்' என்பது ரசிகர்களின் இன்றைய அசைக்க முடியாத நம்பிக்கை.

'20-20' போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பை பெற்று வந்ததிலிருந்து, இப்போது, தோனி தொட்டதெல்லாம் பொன்னாகி கொண்டிருக்கிறது.

சமீபத்தில், உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருப்பதும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.

அதிரடி ஆட்டத்தாலும், அசரவைக்கும் தோற்றத்தாலும் மட்டுமல்ல, தனது அணியை வழிநடத்தி செல்வதிலும் வல்லமை மிக்கவர் இவர். விளையாட்டு தான் தொழில் என்றாகிவிட்ட நிலையில், அதை சின்சியராக செய்து வரும் தொழில் பக்தி மிக்கவர்.

மூத்தவர்களுக்கு மரியாதை செய்வது, சக கலைஞர்களை அரவணைத்து செல்வது போன்றவை இவரது சிறப்புக் குணங்கள். அதீத கோபக்காரர். ஆனால் அதை மற்றவர்கள் கண்டுபிடிப்பது சிரமம். இதுபோன்ற வித்தியாசமான குணாதிசயங்கள் தோனிக்கு மட்டுமல்ல, ஜூலை 7ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

நவம்பர் மாத பலன்கள்:

தோனியின் புகழ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயரும் மாதமிது. மற்றவர்கள் நீண்ட காலம் உழைத்து பெற்ற பெயரை, மிக குறுகிய காலத்தில் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எந்த நாட்டு அணிக்கும் தோனி என்ற இரண்டெழுத்து பெயர் இனி சிம்ம சொப்பனமாக அமையும்.

க நண்பர்கள், வீரர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். உடல் நிலையில் அக்கறையும், பண விஷயத்தில் எச்சரிக்கையும் தேவை. ஜால்ராக்களை விலக்கி வைப்பது எப்போதும் நல்லது. தேவையற்ற கோபம், கெட்டப்பெயர் உருவாக வழிவகுக்கும்.

தோனிக்கு சிறப்பு தரும் எண்கள் : 1, 4 மற்றும் 7.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வைகோ (பிறந்த தேதி: மே 22)
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
சவுரவ் கங்குலி
பராக் ஒபாமா (ஆகஸ்ட் 4, 1961)
அனில் கும்ப்ளே (பிறந்த தேதி அக்.17, 1970)
சூர்யா (பிறந்த தேதி : ஜூலை 23, 1975)
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...