|
| த்ரிஷா (பிறந்த தேதி : மே 4) | |
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரே நேரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்துவரும் இவருக்கு, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம்.
கலகலப்பாக பேசுவதும், கள்ளங்கபடமற்று செயல்களில் ஈடுபடுவதுமாக இருக்கும் இவரைச் சுற்றி எப்போதும் பெரிய நண்பர்கள் வட்டாரம் காணப்பட்டாலும், மிகச் சிலரிடம் மட்டுமே நெருக்கமாக இருப்பார்.
தாம் செய்யும் எவ்வித காரியங்களிலும் சிரத்தையுடன் செயல்படும் அவர், உரிய வெற்றிகளையும் எளிதில் பெற்றுவிடுவார். தனது குடும்பத்தை வழிநடத்துவதில் கவனம் கொள்பவர், பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயங்காதவர். அதேநேரத்தில், எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் தன்னுடைய வட்டாரத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவரது பிரதான 'நெகடிவ்'.
மேலேயுள்ள இரண்டு பாராக்களும் த்ரிஷாவுக்கு மட்டுமின்றி, மே 4-ல் பிறந்த பெரும்பாலானோருக்கு பொருந்தக் கூடியதே.
மார்ச் 2008-க்கான பலன்கள்
மாதத்தின் துவக்கத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டியது வரும். பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்து காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் திருப்திகரமாக இருப்பினும், முன்னெச்சரிக்கை அவசியம்.
தொழிலில் போட்டி நிறைந்து காணப்பட்டாலும், அயராது பாடுபட்டு தன்னுடையை நிலையை நாட்டவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மாதத்தின் இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி வந்து சேரும்.
அலைச்சலும், வேலைச்சுமையும் அதிகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க முடியாமல் போகும். உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் இருக்கும்.மொத்தத்தில், இம்மாதத்தில் பாதகமற்றச் சூழலே நிலவும்.
த்ரிஷாவுக்கு நலம் தரும் எண்கள் : 4 மற்றும் 8
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|