யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
வைகோ (பிறந்த தேதி 22 மே 1944)
- பெரு
vaiko
AP
தமிழகத்தின் நிரந்தர பரபரப்பு தலைவர் வைகோ. தடைக்கற்களையே படிக்கட்டுகளாக்கி கொள்ளும் சாமர்த்தியம் இவருக்கு மட்டுமே சாத்தியம்.

எதிர்ப்புகளிலே வளர்ந்து, எதிர்ப்புகளிலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த தலைவர்தான், இன்றைய தேதியில் அதிகம் இளைஞர் படையை தன் கண்ணசைவில் வைத்திருப்பவர்.

ஒரே நேரத்தில் பல துறைகளில் சாதிக்கும் திறன், வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்படும் புத்திசாலித்தனம் ஆகியவை இவருக்கு இயற்கையிலேயே அமைந்த குணங்களில் ஒன்று.

உடலை மட்டுமல்ல, மனதையும் எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ளும் ஆர்வம், புதுப்புது முயற்சிகளில் காட்டும் ஈடுபாடு, எதற்கும் உடனடி தீர்வு காண முயற்சிப்பது போன்ற மின்னல் வேக நடவடிக்கைகள் வைகோவின் ப்ளஸ்.

அதே நேரத்தில் எவரையும் எளிதில் நம்பும் குணம், சில தவறான நபர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்கும் பாங்கு போன்றவை இவரது மைனஸ்.

இந்த இருவித குணாதிசயங்களும் வைகோவுக்கு மட்டுமல்ல, இந்த தேதியில் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.

பிப்ரவரி மாத பலன்கள்:

ஒரு காலத்தில் எதிர்த்தவர்கள் எல்லாம் தேடி வந்து இவரது காலடியில் சரண்டர் ஆகும் காலமிது. வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கூட இருப்பவர்களே இடறிவிழ வைக்க முயற்சிப்பர். பேச்சிலும், அறிக்கைகளிலும் சர்ச்சைகளை தவிர்ப்பது நலம்.

இவரது பேச்சாற்றலும், இளைஞர் படையும், செயல்பாடுகளும் மென்மேலும் புகழை கூட்டும். உலக அரங்கில் செல்வாக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிக தொலைவு பயணங்களில் கவனம் தேவை.

இம்மாத இறுதியில் எதிரிகள் கை ஓங்கியிருக்கும். அதுவே அவருக்கு கூடுதல் உத்வேகத்தையும் தரும்.

வைகோவுக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4 மற்றும் 7.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சேரன் (பிறந்த தேதி: டிசம்பர் 12, 1970)
கார்த்திக் (பிறந்த தேதி : செப்டம்பர் 13)
சினேகா (பிறந்த தேதி : அக்டோபர் 12)
நமீதா (பிறந்த தேதி : மே 10, 1981)
ஜெயலலிதா (பிறந்த தேதி : பிப்ரவரி 24)
நடிகர் சிரஞ்சீவி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace