|
| சினேகா (பிறந்த தேதி : அக்டோபர் 12) | |
தமிழ் திரையுலகில் குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களின் மூலமும், தனது திறன் மிகுந்த நடிப்பாற்றல் மூலமும் சிறந்து விளங்குபவர் நடிகை சினேகா.
எவ்வித பிரச்சனைகளையும் சாதுர்யமாக எதிர்கொள்வது, ஆரவாரமற்ற அழகால் வசீகரிப்பது, அன்புடன் பழகுவது, எளிமையைக் கடைப்பிடிப்பது, அமைதியை விரும்புவது, முன்னுதாரணமாய் திகழ்வது இவரது ப்ளஸ்கள்.
அதேவேளையில், ஒரு முடிவினை மேற்கொள்வதில் இழுபறி நிலையுடன் இருப்பது, அடிக்கடி யோசனைகளை மாற்றிக் கொள்வது போன்றவை இவரது மைன்ஸ்.
மேற்குறிப்பிட்ட ப்ளஸ்களும் மைனஸ்களும் சினேகாவுக்கு மட்டுமின்றி, அக்டோபர் 12-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடியதே.
பிப்ரவரி 2008-க்கான பலன்கள்
இந்த மாதத்தின் துவக்கத்தில் தொழில் ரீதியாக பல நல்ல செய்திகள் வந்து சேரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆனால், தூரத்து உறவினர்களாலும், நண்பர்கள் சிலராலும் மன சஞ்சலம் ஏற்படும்.
அதேநேரத்தில், குடும்ப பிரச்சனைகள் எதுவந்தாலும், அதனைச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளும் வல்லமை கிட்டும். உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் காணப்படும். ஆனால், பயணங்களால் அசதி ஏற்படும்.
மாதத்தின் பிற்பகுதியில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முடியாத நிலை உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
சினேகாவுக்கு சிறப்புத் தரும் எண்கள் : 3 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|