யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நடிகர் சிரஞ்சீவி
- மு.பெருமாள்
chiru
AP
பிறந்த தேதி : 22 ஆகஸ்ட் 1955

தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினிகாந்தை போல, தெலுங்கு திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. பிரபல நட்சத்திரங்களின் அடுத்த இலக்கு அரசியல் என்ற இலக்கணத்தின்படி, ஆந்திர அரசியலில் களமிறங்குவதற்கு ஆயத்தமான சூழ்நிலையில் அடுத்தடுத்து சோதனைகள்.

செல்ல மகளின் காதல் திருமணம் சொந்த வாழ்க்கையில் புயலை கிளப்ப, சக நடிகர் டாக்டர் ராஜசேகரை தனது ரசிகர்கள் தாக்கிய விவகாரம் இவரது அரசியல் கனவையே ஆட்டம் காணவைத்துள்ளது.

தனது படங்களில் வரும் ஹீரோ கதாபாத்திரம் போலவே, நிஜத்திலும் எதற்கும் கலங்காத உறுதி, எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவை இவருக்கு மட்டுமல்ல, ஆகஸ்ட் 22ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

இளகிய மனமும், இரக்க குணமும் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ப்ளஸ் பாயிண்டுகள் என்றால், அதிகமான ஆடம்பரம் இவர்களது மைனஸ்.
ஜனவரி 2008க்கான பலன்கள் :

அரசு துறை, தொழில் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் புதிய நண்பர்கள் உருவாவார்கள். அதே நேரத்தில் நட்பு வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்திகள் தலைதூக்கும். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு பிரச்சனைகள் அலைகழிக்கும். எதிரிகள் கவனத்தை சிதறடிப்பார்கள்.

எனினும், உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும், ரசிகர்களும் துணை நிற்பர். புதுப்புது திட்டங்களை வகுத்து, அதை செயல்படுத்துவதில் கடினமாக உழைக்க நேரிடும். மனச் சோர்வுக்கு உழைப்பே மருந்து.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். குழந்தைகளுடனான அன்பு மீண்டும் துளிர்க்கும். தேவையற்ற வீண் விவாதங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது.

சிரஞ்சீவிக்கு சாதகமான எண்கள் : 3 மற்றும் 7.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எல்.கே.அத்வானி (பிறந்த தேதி : நவ.8, 1927)
இயக்குனர் ஷங்கர்
அனில் அம்பானி
குஷ்பு
தீபிகா படுகோனே
விக்ரம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace