யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
அனில் அம்பானி
- மு.பெருமாள்
anil-ambani
AP
பிறந்த தேதி ஜூன் 4, 1959

இன்றைய தேதியில் உலகின் 'நம்பர்-1' பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருப்பவர் அனில் அம்பானி.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நிலவரப்படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி. இதன்மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தார்.

ஆனால், இன்றைய தேதியில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன், சுமார் ரூ. 20 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே!

சுமார் இரண்டரை மாதங்களில், அதாவது மிக குறுகிய காலத்துக்குள் தனது சொத்து மதிப்பை இவ்வளவு அதிகமாக உயர்த்திய சாமத்தியசாலி, கடுமையான உழைப்பாளி உலகிலேயே அனில் அம்பானியாக மட்டும்தான் இருக்க முடியும்.
அதனால்தான், உலகிலேயே 'நம்பர்-1' பணக்காரர் என்ற அந்தஸ்தையும் இவரால் எட்டிப்பிடிக்க முடிந்தது.

ஒரே நேரத்தில் பல துறைகளில் லாபம் ஈட்டும் திறன், வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாகவும் ஈடுபடும் புத்திசாலித்தனம் ஆகியவை அனில் அம்பானிக்கு இயற்கையிலேயே அமைந்த குணங்களில் ஒன்று.

உடலை மட்டுமல்ல, மனதையும் எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ளும் ஆர்வம், புதுப் புது முயற்சிகளில் காட்டும் ஈடுபாடு, எதற்கும் உடனடி தீர்வு காண முயற்சிப்பது போன்ற மின்னல் வேக நடவடிக்கைகள் அனில் அம்பானிக்கு மட்டுமல்ல, இந்த தேதியில் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.

ஜனவரி மாதத்தில் பலன்கள்:

புதுப் புது சாதனைகளை நிகழ்த்தும் அதே நேரத்தில், இந்த சாதனைகளை தக்கவைத்து கொள்ள வேண்டுமே ன்ற பதற்றமும் மனதின் ஓர் ஓரத்தில் தலை தூக்கும். ஆனால் அதை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு புதுப் புது வியாபார ஒப்பந்தங்கள் வந்து குவியும்.

திட்டமிட்டு காய் நகர்த்தியதன் மூலம் கிடைத்த இந்த வெற்றியால், செல்வத்தை போலவே உலக அரங்கில் செல்வாக்கும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திரிகளிடம் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.

ஆரம்பத்தில் இருந்ததை விட, மாதத்தின் இறுதியில் தொழிலில் கூடுதல் வெற்றிகள் குவியும். இல்லத்தில் கூடுதல் மகிழ்ச்சி நிலவும்.

அனில் அம்பானிக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3 மற்றும் 7
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஷ்பு
தீபிகா படுகோனே
விக்ரம்
நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின்
நரேன் கார்த்திகேயன்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace