|
| குஷ்பு | |
பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1970
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு உரியவர் நடிகை குஷ்பு!
தமிழ் திரைப்பட உலகில் 'சின்ன தம்பி' காலக்கட்டத்தில் கோலோச்சியிருந்த இவர், தற்போது சின்னத்திரையில் பிரகாசித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கி வருபவர்.
சாதுர்யமாக செயல்படுவது, பிறரிடம் அன்பு செலுத்துவது, எளிமையாக இருப்பது, சமூகத்துடன் ஒன்றி வாழ்வது இவரது ப்ளஸ்கள். அதேநேரத்தில், ஒரு முடிவை மேற்கொள்வதில் நிலைப்புத்தன்மை இல்லாதிருப்பது, ஏமாற்றத்துக்கு ஆளாவது இவரது மைனஸ்கள்.
பகிர்தல், தேடல், களிப்பூட்டுதல், நேர்மை போன்றவை இவர் விரும்புபவை. வன்முறை, அநீதி, நாகரீகத்துக்கு அடிமையாக இருப்பது இவருக்கு ஒருபோதும் பிடிக்காது.
மேலேயுள்ள இரண்டு பாராக்களும் குஷ்புக்கு மட்டுமின்றி, செப்டம்பர் 29-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
ஜனவரி 2008-க்கான பலன்கள்!
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் விதமான காரியங்களில் ஈடுபடுவார்.தொழிலுக்கு சற்று ஓய்வு கொடுத்து, குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்ய ஒதுக்குவார்.
மாதத்தின் முற்பாதியில் பிரச்சனைகள் வந்தாலும், அதனை சாதுர்யமாக சமாளித்துவிடலாம். அதேநேரத்தில், பொது வாழ்வில் முன்னெச்சரிக்கை அவசியம்.
உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். மாதத்தின் இறுதியில் புதிய ஒப்பந்தங்களும், எதிர்பாராத வாய்ப்புகளும் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களுடன் இம்மாதத்தில் அளவோடு பழக வேண்டும். மன சஞ்சலங்கள் இருந்தாலும், ஜனவரி ஏற்றம் மிகுந்த மாதமே!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|