|
| நரேந்திர மோடி |
பிறந்தநாள்: செப்டம்பர் 17, 1950
பாரதிய ஜனதாவின் சமீபத்திய சந்தோஷம் நரேந்திர மோடி. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இனக்கலவரம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் என பல்வேறு தடைகளையும் தாண்டி, குஜராத்தில் மீண்டும் அரியணை ஏறியுள்ள மோடி மஸ்தான் வேலைகளையே மிஞ்சும் சாகசக்காரர்.
ஒரு டீக்கடை உதவியாளராக தனது வாழ்க்கையை துவக்கிய இவர், இன்று நாட்டின் பிரதம வேட்பாளராக சககட்சியினருடன் போட்டிபோடும் அளவுக்கு முன்னேறியிருப்பவர்.
இன்றைய தேதியில் பாரதிய ஜனதா தலைவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மோடி என்று சொன்னால் அது மிகையல்ல.
பணிவு மற்றும் கூச்ச சுபாவம் அதிகம் கொண்டவர். எவருக்கும் நம்பிக்கையாக செயல்படும் குணமும், எதையும் நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் சிந்திக்கும் தன்மையும் இவரது பலம். எதிர்ப்புகளும், போராட்டங்களுமே வாழ்க்கையாக அமைவது மோடிக்கு மட்டுமல்ல, செப்டம்பர் 17ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.
2008 ஜனவரி மாத பலன்கள்:
நேருக்கும் நேராய் மோதுபவர்களைவிட, கூட இருந்தே குழி பறிப்பவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஜாதி, மத விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துவிட்டு, பின்னர் அல்லாடுவதை தவிர்க்க, பேச்சை குறைப்பது நல்லது. மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும்.
இதுவரை மோதி பார்த்த எதிரிகள் இனி மோதமுடியாமல் தலை தெறிக்க ஓடிவிடுவர். ஆனால் புதிய போட்டியாளர்கள் உருவாகாமல் பார்த்துகொள்வது நல்லது.
எத்தனை சர்ச்சைகள் வந்து ஓய்ந்து போனாலும், புதுப் புது சர்ச்சைகள் சுற்றி சுற்றி வரும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எனினும், மக்கள் பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நிரந்த வெற்றிக்கு வழி வகுக்கும்.
மோடிக்கு வெற்றியை தேடி தரும் எண்கள்: 7, 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|