|
| மு.க.ஸ்டாலின் | |
பிறந்த தேதி : மார்ச் 1, 1953 திராவிட முன்னேற்றக் கழக இ௦ளைஞரணி பொதுச் செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான இவர் மீது கட்சியில் மட்டுமல்ல, தமிழக மக்களிடையே கூட மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.
2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான இவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்; இரக்க குணமும், அன்பும் நிறைந்தவர். உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர்.
கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கும் சாதுர்யம் நிரம்பிய இவரிடம் இருந்து ரகசியங்களை வெளிக்கொணர்வது மிகுந்த சிரமத்துக்குரியதாகும்.
மேலேயுள்ள இரண்டு பாராக்களும் ஸ்டாலினுக்கு மட்டுமின்றி, மார்ச் 1-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே!
டிசம்பர் 2007-க்கான பலன்கள்
இம்மாதத்தைப் பொறுத்தவரையில் ஓய்வின்றி இயங்க வேண்டியது இருக்கும். உரிய செல்வாக்கு மேலோங்கும். பொது இடங்களில் பேசுகையில் ஒன்றுக்கு மூன்று முறை யோசித்து நிதானமாக சொற்றொடர்களை உதிர்ப்பது சாலச் சிறந்தது.
மூத்தோர்களின் பாராட்டு மழையில் நனைவார். பல்வேறு தரப்பினரின் பார்வையும் படும் நிலை உள்ளதால், மிகுந்த கவனத்துடன் எவ்வித காரியங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு பெருகும்.
மாதத்தின் இறுதியில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கும் வகையிலான ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கியிருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அடுத்த ஆண்டுக்கான செய்லபாடுகளுக்கான திட்டங்களை முன்கூட்டியே போட்டுவிடும் நிலை உண்டாகும். மொத்தத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க மாதம்.
ஸ்டாலினின் சாதனைக்கு உதவும் எண்கள் : 1 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பில்லா | | பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது.... |
| |
|
|
|
|
|
|
|