|
| நரேன் கார்த்திகேயன் | |
பிறந்த தேதி : ஜனவரி 14, 1977 கார் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் ஃபார்முலா 1 போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.
இந்த விளையாட்டுத் உறையில் மென்மேலும் சாதனை புரிவதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவரும் இவர், வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
'சும்மா' என்ற வார்த்தைகயைப் பிடிக்காத நபர்களில் இவருக்கே முதலிடம். எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்; குடும்பத்தின் மீது உள்ள அக்கறையைக் காட்டிலும், ஒரு சதவிகிதமேனும் கூடுதல் அக்கறை, தனது தொழில் மீது செலுத்துபவர்களில் இவரும் ஒருவர்.
இந்தக் குணம் பல நேரங்களில் அவரது ஏற்றத்திற்கு வழிவகை செய்தாலும், சில நேரங்களில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அவ்வப்போது குழப்பத்துடன் காணப்படுவது இவரது நெகட்டிவ்களில் ஒன்று. ஆயினும், பாசிட்டிவ்களையே அதிக அளவில் தன்வசம் வைத்திருப்பவர்.
இவையாவும், நரேனுக்கு மட்டுமின்றி ஜனவரி 14-ம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
டிசம்பர் 2007-க்கான பலன்கள்
கனவுகள் சில மெய்ப்படும் மாதமிது. தனது சாதனைகளால், பாராட்டுக்களைக் குவிப்பார். அதேநேரத்தில், புகழாரங்களில் சிலிர்த்துப் போகாமல், அடுத்தக்கட்ட இலக்கை நோக்கிப் பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.
புதிய உத்திகளை வகுத்து, அதன்மூலம் வெற்றியும் பெறுவார். பயணங்கள் உற்சாகத்தைக் கொடுக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வருவாய் வருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேலோங்கி இருக்கும். ஆனால், மனதில் இனம் புரியாத சோகம் இழையோடிக் கொண்டிருக்கும்.
நரேனுக்கு நன்மை தரும் எண்கள் : 5 மற்றும் 8
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|