|
| கமலஹாசன் |
பிறந்த தேதி : நவம்பர் 7,1954 தமிழ் திரையுலகுக்குக் கிடைத்த சகலகலா வல்லவர். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழ் திரைப்படத் துறையை உலக மக்களால் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் ஒருவர் என்றால் அது மிகையாகாது.
கலைத் துறையில் தொடர்ந்து பல சாதனைகள் பலவற்றை செய்துவரும் கமலஹாசன், ஓய்வின்றி உழைப்பவர்களில் ஒருவர். அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்குபவர். புதுமைகளைத் தேடித் தேடிப் புசிப்பவர்.
இயல்பிலேயே தலைமைப் பண்பு நிறைந்து காணப்படும் இவருக்கு, தனது செய்கைகளால் அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்துவது விருப்பமான விஷயம். எந்தவொரு செயலையும் மன உறுதியுடன் செய்யக்கூடிய இவருக்கு, பிறருக்கு தீங்கு விளைவிக்காத பொறாமை குணம் சற்று உண்டு.
மேலேயுள்ள இரண்டு 'பாரா'க்காக்களும் கமலுக்கு மட்டுமின்றி, நவம்பர் 7-ல் பிறந்த பெருமான்மையானோருக்கும் பொருந்தும்.
டிசம்பர் 2007-க்கான பலன்கள்
மாதத்தின் துவக்கத்தில் பம்பரம் போல சுழன்று வேலை செய்ய வேண்டியது வரும். உடல் ஆரோக்கியம் மிகுந்து காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பும், உறவுகளின் உந்துதலும் நன்மைகளை விளைவிக்கும்.
புதிய ஒப்பந்தங்களைச் சற்று தள்ளிப்போட வேண்டியது வரும். எதிர்ப்பார்த்தபடியே தொழிலில் ஏற்றம் காணப்படும். அத்துடன், தன் மீது வைத்துள்ள பிறரது நம்பிக்கையை வெகுவாக காப்பாற்றுவார்.
பாராட்டுக்களும் கெளரவங்களும் குவிந்து மகிழ்ச்சியைத் தந்தாலும், மனதில் இனம்புரியாத சஞ்சலம் இருக்கும். அதேநேரத்தில், குடும்பத்தினருடன் குதூகலமாக இருப்பதற்கு நேரம் ஒதுக்குவதால், இயல்பு நிலையில் மாற்றம் வராது. மொத்தத்தில், இம்மாதம் மனதிற்கு இதமளிக்கும்!
கமலஹாசனுக்கு ஏற்றம் தரும் எண்கள் 4 மற்றும் 7
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|