யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நடிகர் மாதவன்
- சரா
madhavan
FE
பிறந்த தேதி : ஜூன் 1, 1970
'சாக்லேட் பாய்' என்ற அடைமொழியில் இருந்து சிறிது சிறிதாக விலகி, தனித்துவம் மிகுந்த நடிப்பாற்றலால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் ஆர்.மாதவன்.

பல துறைகளிலும் ஒருங்கே ஈடுபடும் திறன், சொல்லாற்றல், நகைச்சுவை உணர்வு மிக்கவர், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதுடன், அனைவரிடமும் எளிதாக பழகும் குணமும் உடையவர்.

மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் இளமையாக இருக்கும் இவருக்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது சிறிதளவில் தயக்கமும், பயமும் இருக்கக் கூடும்.

பேசுதல், படித்தல், ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்தல், புதுமையானவற்றை புரிதல் போன்றவை இவருக்கு பிடித்தமானவை. அதேநேரத்தில், ஏட்டுக் கல்வியும், ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்வதும், தனிமையும் அறவே பிடிக்காது.

இவையாவும் மாதவனுக்கு மட்டுமின்றி, ஜூன் 1-ல் பிறந்த பெரும்பான்மையானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே!

டிசம்பர் 2007-க்கான பலன்கள்

மாதத்தின் துவக்கத்தில் இருந்து வந்த பதற்றம், பிற்பாதியில் விலகும். தொழிலில் எதிர்பார்த்த பலனும், பாராட்டுக்களும் குவியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடும்.

இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள், எதிரிகளைக் கண்டறியும் அனுபவம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாதத்தின் பிற்பாதியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பார். மொத்தத்தில், இம்மாதம் வெற்றி நிறைந்ததாகவே இருக்கும். ஆயினும், மனம் சஞ்சலம் நிறைந்ததாகவே காணப்படும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகை மாதுரி தீட்ஷித்
நடிகர் அஜித்
தனுஷ்
சூர்யா
அனில் கும்ப்ளே
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace