|
| நடிகை மாதுரி தீட்ஷித் | |
பிறந்த தேதி 15.05.1967
இந்தி திரையுலகைவிட்டு பல வருடங்களாகிவிட்டாலும் இன்னும் இந்திய ரசிகர்களை ஏங்க வைக்கும் கனவுகன்னி.
இவரது 'ஏக், தோன், தீன்...' மற்றும் 'சோளிக்கே பீச்சே க்யா ஹை...' பாடல்கள் ஒரு காலத்தில் இந்திய இளைஞர்களின் தேசியகீதமாய் ஒலித்தவை. அதனாலேயே, திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்ட பின்னரும் 'ஆஜா நாஜ்லே' மூலம் மீண்டும் இந்தி திரையுலகில் பிரவேசித்துள்ளார்.
அழகில் மற்றொரு கிளியோபாட்ரா என்றும், நடிப்பில் 'பொம்பள அமிதாப்பச்சன்' என்று புகழப்படுபவர். இதனால்தான் 90 வயதை நெருங்கிகொண்டிருக்கும் பிரபல ஓவியர் எம்.எப். உசேன் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் கூட இன்னும் இவரது ரசிகர்கள் வட்டாரத்தில் உள்ளனர்.
பிடித்தது, ரிஸ்க் எடுப்பது. அதனால்தான் மருத்துவத் துறைக்கு செல்ல நினைத்தவர், துணிச்சலாக நடிப்புத்துறையில் இறங்கினார்.
இந்தி திரையுலகில் புகழ் உச்சியில் இருந்தபோதே அமெரிக்க மாப்பிள்ளையை கைப்பிடித்து அமெரிக்கா பறந்தார். இதன் காரணமாக, 'இன்ஜினியர்' தமிழ் படத்தின் மூலம் இவரை தரிசிக்கும் வாய்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே போனது.
லேட்டஸ்ட் ரிஸ்க், திரையுலகில் 40வது வயதில் 'ஆஜா நாஜ்லே' மூலம் தனது 2வது இன்னிங்சை துவங்கியிருப்பது.
நேர்மை, நன்னடத்தை மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவையும் இவரது விருப்பம்.
பிடிக்காதது, செய்த உதவிகளை விளம்பரப்படுத்துவது, முகஸ்துதி, முதுகுக்கு பின்னால் பேசுவது.
இந்த குணநலன்கள் மாதுரிக்கு மட்டுமல்ல, மே 15ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.
டிசம்பர் மாத பலன்கள்:
எதையும் அவசர கதியில் செய்யாமல் நிதானமாக ஆக்கப்பூர்வமாக செய்வது, நல்ல ஆலோசகர்களை நண்பர்களாக்கி கொள்வது தற்போதைய அவசிய தேவை..
நல்ல கருத்து என்று சொல்ல நினைக்கும் பல கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி, இக்கட்டில் மாட்டிவிடும். விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், கூடுதல் கவனம் தேவை.
2வது இன்னிங்சிலும் உங்களது வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. ரெடி! ஏக், தோ, தீன்....
இந்த கனவுகன்னிக்கு ராசியான எண்கள்: 1, 3
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|