|
| பிரியங்கா சோப்ரா | |
பிறந்த தேதி : ஜூலை 18,1982 கடந்த 2000-ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர். ஜார்கண்டில் பிறந்த இவர், தமிழ் படமான விஜய்யின் 'தமிழன்' என்ற அப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், கோலிவுட்டில் சோபிக்க முடியாமல் போனாலும், பாலிவுட்டில் கலக்கி வருபவர்.
அண்மையில் வெற்றிக் கொடி நாட்டிய 'டான்', 'சலாம் ஈ இஷ்க்' போன்ற படங்கள் மூலம் இந்தியா முழுவதும் தனது ரசிகர்கள் வட்டத்தை விரிவாக்கிக்கொண்டுள்ள இவர், தனது நடிப்பாற்றலால் விருதுகள் பலவற்றையும் பெற்றவர்.
அன்பாகப் பழகுவதும், உணர்வுப் பூர்வமாக செயல்படுவதும் மட்டுமின்றி, கற்பனைத் திறன், எச்சரிக்கை உணர்வு, இரக்க குணம் போன்றவை இவரது ப்ளஸ். போட்டி மனப்பான்பை, கூடுதலாக உணர்ச்சிவசப்படுவது போன்றவை இவரிடம் உள்ள கொஞ்சம் மைனஸ்.
பொழுதுபோக்கு, காதல், குழந்தைகள், விழாக்கள் போன்றவை இவருக்குப் பிடித்தமானவை. தோல்வி, எதிர்ப்பு, அதிகாரம், அறிவுரை போன்றவை இவருக்குப் பிடிக்காதவை. இவை பிரியங்காவுக்கு மட்டுமின்றி, ஜூலை 18-ல் பிறந்த பெரும்பாலோனோருக்கும் பொருந்தும்.
பிரியங்கா சோப்ராவின் ஆகஸ்ட் மாத பலன்கள்
வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கும். பாராட்டு மழையில் நனையும் அதேவேளையில், வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான திட்டங்களைத் தீட்ட வேண்டியது இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். புதிய நட்புகள் உண்டாகும்.
உடல் நலன் மேன்மையுடன் இருந்தாலும், மாதத்தின் இறுதியில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணை புரிவார்கள். புதிய அழகு சாதனைப் பொருட்களை வாங்கி மகிழ்வார். பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்வார்.
பிரியங்காவுக்கு நன்மை தரும் எண்கள் : 3 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|