யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
ஸ்ரீசாந்த்
- சரா
srishanth
AP
பிறந்த தேதி : பிப்ரவரி 6, 1983
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் தனது திறமை மட்டுமின்றி, தனித்தன்மை வாய்ந்த செயல்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஸ்ரீசாந்த். கேரளாவில் பிறந்த இவர், தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால், அதில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற்றம் கண்டவர்.

தற்போது, இந்திய அணியின் குறிப்பிடத்தக்கவராகத் திகழும் இவர், மிகுதியான நட்புணர்வும் நேர்மையும் கொண்டவர். தன்னை உண்மையாக வெளிப்படுத்தும் தன்மை மிக்கவர். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதில் பிறழாத இவரிடம், புத்திசாலித்தனமும் நிறையவே உண்டு.ஆனால், தேவையின்றி விவாதிப்பதும், இடம் பாராமால் உணர்வுகளை வெளிப்படுத்துவதும், முரண்பாட்டுடன் செயல்படுவதும் இவரது நெகட்டிவ்ஸ்.

நற்செயலுக்காக போரிடுவது, கனவு காண்பது, திட்டமிடுவது, பழைய நிகழ்வுகளை அசைபோடுவது, நட்பு பாராட்டுவது, விளையாட்டுத் தனத்துடன் செயல்படுவது போன்றவை இவருக்குப் பிடித்தமானவை. தனிமை, ஒருவரைப் பின்பற்றுவது, லட்சியங்களைக் கொண்டிருத்தல் போன்றவை இவருக்குப் பிடிக்காதவை.

இந்த குணநலன்கள் யாவும் ஸ்ரீசாந்துக்கு மட்டுமின்றி, பிப்ரவரி 6-ல் பிறந்த பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

2007 ஆகஸ்ட் மாதத்துக்கான பலன்

இந்த மாதத்தைப் பொருத்தவரையில், ஸ்ரீசாந்துக்கு மகிழ்ச்சியும், வருத்தமும் ஒருங்கே காணப்படும். தனது திறமையால் அனைவரின் பாரட்டையும் பெறுவார். தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் இவரது முயற்சிகளில் ஏற்றம் காணப்படும்.

வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியை மேலும் கூட்டும். தனக்கு மேல் நிலையில் உள்ளவர்களின் ஆதரவைப் பெறுவார். அதேநேரத்தில், தனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தக் கூடிய காரியங்களைச் செய்து வருந்த நேரிடும்.

அவ்வாறான தவறுகளால், பொருளாதார இழப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, மாதத்தின் துவக்கத்தில் கவனம் தேவை. உடல் நலன் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு பெருகும்.

ஸ்ரீசாந்துக்கு சிறப்பை அளிக்கும் எண்கள் : 6 மற்றும் 9
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சஞ்சய் தத்
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
முரளிதரன்
ஸ்ரேயா
தினேஷ் கார்த்திக்
நரேன் கார்த்திக்கேயன்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace