|
| டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் | |
பிறந்த தேதி: 15 அக்டோபர் 1931
இன்றைய தினத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் ஒரே நபர், அப்துல் கலாம். கடந்த 5 ஆண்டு காலமாக நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றி நேற்றுடன் ஓய்வு பெற்ற இவர், ஜனாதிபதி மாளிகையை 'மக்கள் மாளிகை'யாக மாற்றியவர்.
இதனாலேயே, 'மக்கள் ஜனாதிபதி' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தின் கடற்கரை பகுதியான ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த இவர், அறிவியல், விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.
கடந்த 5 ஆண்டுகாலமாக ஜனாதிபதி பதவியை அலங்கரித்த அவர் முப்படைகளின் தலைவராகவும் இருந்தார்.
ஏவுகணை, ராக்கெட் போன்ற திட்டங்களிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி, நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக வாழ்ந்து வருகிறார். இதனாலேயே, 'ஏவுகணை தொழிற்நுட்பத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
ஜூலை 2007ல் கலாமுக்கான பலன்கள் :
அறிவியல், ஆராய்ச்சி, விஞ்ஞானம் தவிர, இயற்கை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
ஜனவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள், கலாமுக்குக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர்.
கல்விப்பணியில் மீண்டும் தனது சேவைகளை தொடர்வார். குறிப்பாக 'பயோடெக்னாலஜி' பிரிவில் மேலும் பல சாதனைகளை இவர் நிகழ்த்துவார்.
குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும்படி, கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தாலும் தனது சேவைக்காக எப்போதும் குடும்பத்தினரை பிரிந்தே இருக்க வேண்டிய கட்டாயம்.
இவரை அரசியலுக்கு இழுப்பது குறித்து எப்போதும் ஒரு கூட்டம் சிந்தித்து கொண்டே இருக்கும்.
2வது முறையாக கலாம் ஜனாதிபதியாக விரும்பவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இவரையே மீண்டும் ஜனாதிபதியாக்க தவறி விட்டோமே என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வருந்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.
நாடே போற்றும் கலாமுக்கு, நாமும் போடுவோம் ஒரு 'சலாம்'!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|