|
| ஸ்ரேயா | |
பிறந்த தேதி : 11 செப்டம்பர் 1982
தமிழ் திரையிலகின் தற்போதைய கனவுக்கன்னி, சாட்சாத்... 'சிவாஜி' நாயகி ஸ்ரேயாவேதான்!.
'சிவாஜி' ரஜினி படமா? ஷங்கர் படமா? என சாலமன் பாப்பையாவை நடுவராக நியமிக்காத குறையாக கோடம்பாக்கத்தில் பெரிய பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்க, 'இது ஸ்ரேயா படம்' என உற்சாகம் பொங்க கோஷம் எழுப்புகின்றனர் அவரது ரசிகர்கள்.
"எங்களுக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினியை தெரியும். 'சூப்பர் டைரக்டர்' ஷங்கரையும் தெரியும். ஆனால், ஏற்கனவே சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் 'சூப்பர் நாயகி' ஸ்ரேயாவை அனைத்து தரப்பு ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, எங்களது தூக்கத்தை தொலைக்க வைத்தது 'சிவாஜி'தான்" என ஸ்ரேயா ரசிகர்கள் விளக்கம் தருகின்றனர்.
'சிவாஜி' ரிலீசுக்கு பின்னர், த்ரிஷா, நயன்தாரா ரசிகர்கள் சிலர் ஸ்ரேயா ரசிகர்களாக மாறி விமோச்சனம் தேடி கொண்டதாக கேள்வி.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பிறந்த இந்த அழகு மயில், தற்போது வசிப்பது மும்பையில்.
தெலுங்கு திரையுலகில் உருவான இந்த அழகுப்புயல், தற்போது மையங்கொண்டிருப்பது கோடம்பாக்கத்தில்.
புஷ்பேந்திரா சரண்- நீரஜா சரண் தம்பதியினருக்கு பிறந்த இவரது இயற்பெயர் ஸ்ரேயா சரண்.
'எனக்கு 20 உனக்கு 18 மூலம்' இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இவரை தமிழ்கூறும் நல்லுலகுக்கு அழைத்து வந்தாலும், தனது தயாரிப்பில் வெளிவந்த 'மழை' படத்தில் ஸ்ரேயாவை கவர்ச்சி 'மழை'யில் ஆட விட்டவர் சரண். (இயக்கம்-ராஜ்குமார்)
அதன் பின் வெளியான 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்துக்கு பிறகு தான் தமிழ் திரையிலகில் நிஜமாகவே இவரது நடிப்பு+கவர்ச்சி திருவிளையாடலே ஆரம்பமானது எனலாம்.
ஆம். இதில் மருமகனுடன் (தனுஷ்) ஜோடி சேர்ந்த ஸ்ரேயா, அடுத்த படத்திலேயே மாமனாருடன் (ரஜினி) ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தார்.
தற்போது விஜயுடன் 'அழகிய திருமகன்' படத்தில் ஆட்டம் போட்டு வருகிறார் இந்த 'அழகிய திருமகள்'. 'கந்தசாமி'யில் விக்ரமுடன் கலக்கி வருகிறார் இந்த கண்மணி!
ஜூலை, 2007க்கான பலன்கள்
'சிவாஜி'யில் ஒப்பந்தமான தேதியிலிருந்தே ஸ்ரேயாவுக்கு சுக்ரதிசை ஆரம்பித்து விட்டது (பல முன்னணி நடிகைகளுக்கு சனி திசை ஆரம்பித்துவிட்டது தனிக்கதை)
'சிவாஜி' ரீலிசுக்கு பின்னர் இந்த சுக்ரதிசை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இன்னும் சில மாதங்களுக்கு தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஸ்ரேயா நீடிப்பார்.
அதேவேளையில் 'சிவாஜி'க்கு பின்னர் சம்பளம் எக்கச்சக்கமாக எகிறியிருப்பதால் சில தயாரிப்பாளர்கள் கனவில் கூட ஸ்ரேயாவை நினைத்து பதறும் அபாயமும் உண்டு.
"ஸ்ரேயா குறைக்க வேண்டியது சம்பளத்தையா அல்லது ரசிகர்களின் இதய துடிப்பை எக்கச்சக்கமாய் எகிறவைக்கும் அளவுக்கு அதிகமான கவர்ச்சியையா?' என ரசிகர்கள் மட்டத்தில் 'சூடான' விவாதமே நடந்துவருவது தனிக்கதை.
இந்த அழகு மயிலுக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 4 மற்றும் 7.
ஸ்ரேயாவுக்கு இதுவரை பிடித்த நடிகராக இருந்தவர், அமிதாப். இப்போது ரஜினி.
"பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!"
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | சிவாஜி | | பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது... |
| |
|
|
|
|
|
|
|