|
| த்ரிஷா | |
பிறந்த தேதி : மே 4, 1983 தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை தனது குழந்தைத்தனமான முகம் மற்றும் சிரிப்பைக் கொண்டு ரசிகர்களை வசீகரித்து வருபவர் த்ரிஷா. 'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 1999-ல் சேலம் மாவட்ட அழகியாகவும், 2000-ல் சென்னை அழகியாகவும், பின்னர் 2001-ல் இந்திய சிரிப்பழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கலகலப்பாக பேசுவதும், கள்ளங்கபடமற்று செயல்களில் ஈடுபடுவதும் த்ரிஷாவின் இயல்பான குணநலனே. எப்போதும் அவருக்கு பெரிய நண்பர்கள் வட்டாரம் காணப்பட்டாலும், அவருக்கு மிக நெருக்கமாக ஒரு சிலரே இருப்பர்.
தாம் செய்யும் எவ்வித காரியங்களிலும் சிரத்தையுடன் செயல்படும் அவர், உரிய வெற்றிகளையும் எளிதில் பெற்றுவிடுவார். தனது குடும்பத்தை வழிநடத்துவதில் கவனம் கொள்பவர், பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயங்காதவர்.
அதேநேரத்தில், எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் தன்னுடைய வட்டாரத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவரது பிரதான 'நெகடிவ்'. இவையாவும் த்ரிஷாவுக்கு மட்டுமின்றி, மே 4-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே!
ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜூலை மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள், த்ரிஷாவின் நெருங்கிய நண்பராவதற்கான வாய்ப்பை எளிதாகப் பெறுவர்.
இந்த மே மாதத்தைப் பொறுத்தவரையில், த்ரிஷாவுக்கு ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். ஒரு வட்டத்துக்குள் தன்னை இதுவரை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர், அதனை விரிவுப்படுத்த முயல்வார்; அதற்கான பிள்ளையார் சுழியையும் உடனடியாக இடுவார்.
தொழிலில் மேன்மை நிறைந்து காணப்படும். போட்டிகள் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அவரது இடத்துக்கு பாதிப்பு வர வாய்ப்பில்லை. சர்ச்சைகளுக்கும் புரளிக்கும் ஆளாக நேரிடலாம். அதுவே, வளர்ச்சிக்கு பாசிட்டிவாக அமையும் என்பது உறுதி. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், களைப்பு மேலிடும்.
த்ரிஷாவை தித்திக்க வைக்கும் எண்கள் : 4, 6 மற்றும் 8
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | நான் அவன் இல்லை | | பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும்... |
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|