|
| ரிக்கி பான்டிங்
| |
பிறந்த தேதி : டிசம்பர் 19, 1974 உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவரது இயற்பெயர் ரிக்கி தாமஸ் பான்டிங். இதுவரை 275 ஒருதினப் போட்டிகளில் விளையாடிய இவர், 10,204 ரன்கள் குவித்து சாதனை செய்ததுடன், தொடர்ந்து மென்மேலும் தனது முயற்சிகளால் ஏற்றம் காண வழிவகை செய்பவர்.
இவ்வாறு சாதனைகள் பல புரிய வேண்டும் என்ற எண்ணம்தனை இயல்பிலேயே தன்னகத்தே கொண்டு செயல்படுபவர் ரிக்கி. தன்னுடைய இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதை அடைய போராடும் குணமே அவரது வெற்றிக்கு வித்திட்டு வருகிறது.
எளிதில் உணர்ச்சிவசப்படாத இவர் வெற்றி, தோல்வியை சமமாக எண்ணி செயல்படுபவர். இவருக்கு தலைமைப் பண்பு என்பது இயல்பிலேயே உண்டு. அத்துடன், பொறுப்புடன் தனது சமூகப் பணியை மேற்கொள்வது போன்றே, சொந்த வாழ்க்கையிலும் கவனம் செலுத்துவார்.
கொஞ்சம் அதிகப்படியான நம்பிக்கையே இவரது பலமும், பலவீனமும் என்றால் மிகையாகாது. இந்த குணநலன்கள் யாவும் டிசம்பர் 19-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
ஜனவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பான்டிங்குக்கு பாசமானவர்களாக இருப்பர்.
இந்த ஏப்ரல் மாதத்தைப் பொறுத்தவரையில், துவக்கத்தில் இருந்தே ரிக்கி பான்டிங்குக்கு நல்ல ஏற்றம் காணப்படும். தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகள், மென்மேலும் உந்துதலை ஏற்படுத்தும்.
சோர்வின்றி உழைக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்கள் உரிய ஒத்துழைப்பைத் தருவர். புதிய சாதனைகளை மேற்கொள்வார். அத்துடன், மாதத்தின் கடைசி நாட்களில் மிகுந்த இன்ப அதிர்ச்சியை உண்டாக்கும் சற்றும் எதிர்பாராத நிகழ்வு நடந்தேற வாய்ப்புண்டு.
பான்டிங்குக்கு பாராட்டு பெற்றுதரும் எண்கள் : 1, 5 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | AP |
| | | பெரியார் | | பெரியார் என்ற ஒரு சகாப்தத்தையே ஒரு திரைப்படம் மூலம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சுட்டெரிக்கும் இந்த அக்னி வெயிலில் சிறிது நேரம் வெளியே... |
| |
|
|
|
|
|
|
|