யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
மஹேந்திர சிங் தோனி
- எஸ்.சரவணன்
dhoni
AP
பிறந்த தேதி : ஜூலை 7, 1981
குறுகிய காலத்தில் தனது அசாத்திய திறமையால் புகழின் உச்சிக்கு சென்ற விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் மஹேந்திசிங் தோனி.

தனது அதிரடி பேட்டிங் மூலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தவரான தோனிக்கு, இயல்பிலேயே தன்னைச் சுற்றியிருப்பவர்களை,அவ்வப்போது தனது செய்கைகளால் ஆச்சரியப்படுத்துவது என்பது மிகவும் விருப்பமானது.

செய்கைகள் மட்டும் இன்றி தனது தோற்றத்தாலும் அனைவரையும் வசீகரிக்க விழையும் இவரை எளிதில் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. தன் தொழிலில் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறாரோ, அதே அளவில் குடும்பத்திலும் கவனம் செலுத்தும் குணம் கொண்டவர்.

கலை, விளையாட்டு இவற்றோடு நண்பர்களுடன் அரட்டை அடிப்பது இவருக்கு மிகவும் விருப்பமானது. ஆயினும், வேலை என்று வந்துவிட்டால், கவனச் சிதறலின்றி பணிபுரிபவர். இந்த குணநலன்கள் தோனிக்கு மட்டுமின்றி, ஜூலை 7-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

மஹி என்று செல்லமாக தனது நண்பர்களால் அழைக்கப்படும் தோனிக்கு, ஜனவரி, மார்ச், மே, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர்.

மார்ச் மாதத்தைப் பொறுத்தமட்டில், தோனிக்கு ஏற்றம் மிகுந்து காணப்படும். வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பாராட்டுதலைப் பெறுவார்.

குடும்பத்தினரை பிரிய நேரிடும். அதேநேரத்தில் அன்பு பலப்படும். உடன் பணிபுரிபவர்கள் மிகவும் உறுதுணையுடன் இருப்பர்.

உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சிறிய காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இம்மாதக் கடைசியில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஆனாலும், மார்ச் மாதம் நன்மைகள் மிகுந்த மாதமே.

தோனிக்கு தெம்பூட்டும் எண்கள் : 4, 5 மற்றும் 7
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரிக்கி பான்டிங்
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace