|
| வீரேந்தர் சேவாக் | |
பிறந்த தேதி : அக்டோபர் 20, 1978 \இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்களை குவித்து எதிரணியை திக்குமுக்காடச் செய்தவர்களில் சேவாக்கும் ஒருவர்.
அண்மையில், சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் போனாலும், நம்பிக்கையை தளரவிடாத அவர், இந்திய அணியில் இடம்பெற்று தற்போது உலக கோப்பையில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார்.
உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றதே அவரது முயற்சிக்கு ஓர் உதாரணம். முயற்சி மட்டுமின்றி, அன்பு, ஒழுக்கம், நற்பெயர் பெறுவதில் ஆர்வம் போன்ற பல்வேறு நற்குணங்களையும் தனனகத்தே கொண்டுள்ளவர்.
வன்முறையாளர்களையும், பிறரை அவதூறாக பேசுபவர்களையும் அவருக்கு ஒருபோதும் பிடிக்காது. அறிவியலை விட கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதேநேரத்தில், அவ்வப்போது பதற்றமடைவது அவரது இயல்பு.
இந்த பொதுவான குணநலன்கள் யாவும் சேவாக்குக்கு மட்டும் இல்லை; அக்டோபர் 20-ல் நீங்கள் பிறந்திருந்தால், உங்களுக்கும் பொருந்தும்.
ஜனவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள், சேவாக்குக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர். (குறிப்பு : நண்பர் திராவிட் பிறந்தது ஜனவரி 11-ல்).
மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில், சேவாக் தனது திறமையை நிரூபிக்கும் வகையிலான அதிக வாய்ப்பைப் பெறுவார். அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வார்.
தொடக்கத்தில் வெற்றி கிட்டாமல் போயினும், மாதத்தின் கடைசியில் பாராட்டுமழையில் நனைவார். குடும்பத்தில் இருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவினால் நன்மைகள் பல பெறமுடியும்.
மனவலிமைக்கு உறுதுணையாக உடல் வலிமையும் இருக்கும். சிறு காயம் ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் அது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. மொத்தத்தில் மார்ச் மாதம் சேவாக்குக்கு மேன்மை மிகுந்த மாதம்.
சேவாக்கை செழிப்பாக்கும் எண்கள் : 1,2 மற்றும் 7
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|