|
| விஜய் | |
பிறந்ததேதி : ஜூன் 22, 1974
தமிழ் சினிமாவில் 'இளையத் தளபதி' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், தற்போது முதன்மை நிலையிலுள்ள நாயகர்களில் ஒருவர்.
தந்தையின் (இயக்குனர் சந்திரசேகரன்) உந்துதலினால் தமிழ் சினிமாவில் தடம்பதித்திருந்தாலும், தனது தனித்திறனின் மூலம் முன்னுக்கு வந்தவர் விஜய்.
தற்போது 'போக்கிரி'யாக வெள்ளித்திரையில் வலம் வரும் இவருக்கு உண்மையில் போக்கிரித்தனம் என்பதே பிடிக்காத ஒன்று. அதேநேரத்தில், இவரை முழுவதுமாக எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
இயல்பிலேயே கலையின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு, சினிமா மட்டுமின்றி நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளின் மீது விருப்பம் உண்டு. அதோடு அனைத்து கலைகளையும் ரசிக்கவும் செய்வார். சமூக சிந்தனையுடன் தனது குடும்பத்தைப் பற்றியும் அதிக அக்கறை கொள்வார்.
நண்பர்கள் வட்டாரம் குறைவாக இருப்பினும், நிறைவாக நட்பை வளர்ப்பதில் இவருக்கு இணை இவரே. இந்த குணநலன்கள் யாவும் விஜய்க்கு மட்டுமின்றி ஜூன் 22-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.
ஜனவரி, மார்ச், மே மற்றும் ஜூலை மாதங்களில் பிறந்தவர்கள் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர்.
மார்ச் மாதத்தைப் பொருத்தமட்டில், விஜய்க்கு ஏற்றம் மிகுந்து காணப்படும். செய்யும் காரியங்களில் அதிக சிரத்தை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெறுவார். தொழிலில் போட்டி இருப்பினும் அதனை சாதுர்யமாக சமாளித்துவிடுவார்.
இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். விசேஷ காரியங்களில் பங்கேற்று நண்பர்களை மகிழ்விப்பார். உழைப்புக்கு மிகுந்த உறுதுணையாய் உடல்நலம் இருக்கும்.
வாய்ப்புக்களை தேர்ந்தெடுக்கும்போது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போதும் சற்று கவனம் தேவை. மொத்தத்தில், இம்மாதம் விஜய்க்கு மிகுந்த மேன்மை பொருந்தியதாய் இருக்கும்.
விஜய்க்கு வெற்றி தரும் எண்கள் : 4 மற்றும் 6
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|