|
| ப.சிதம்பரம் | |
பிறந்த தேதி : செப்டம்பர் 16, 1945 தற்போது இந்திய அரசியல் சூழலிலும், ஊடகங்களிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுவரும் பிரமுகர்களில் குறிப்பிடத்தக்கவர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கையில் பிறந்த இவர், தனது இளமைப்பருவத்தில் இருந்தே அரசியல் மீது நாட்டம் கொண்டவராக இருந்து, பின்னர் தீவிர அரசியலில் இறங்கியவர். தற்போது நாட்டின் நிதியமைச்சர் என்ற உயர் பதவியில் வீற்றிருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது அவரது முயற்சியும் தன்னம்பிக்கையுமே ஆகும்.
அவருக்கு தலைமைப் பண்பு என்பது இயல்பிலேயே உள்ள ஒரு அம்சம். ஆயினும், தலைமைக்குக் கீழ் சிறப்பாக செயல்படுவதையே விரும்புவார். அவர், தான் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவர்களில் முன்னிலை வகிப்பார். அதுபோல், எந்த ஒரு செயலிலும், உணர்வுப்பூர்வமாக செயல்படுவதைக் காட்டிலும், அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பதே அவரது சிறப்பம்சம்.
தொழிலில் எவ்வகையில் கவனம் செலுத்துவாரோ, அதே அளவில் தன்னை சார்ந்துள்ளவர்கள் மீதும் அக்கறையுடன் இருப்பார். உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தாமல், அவற்றை கட்டுப்படுத்தி செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரே.
மேற்குறிப்பிட்டுள்ள குணநலன்கள் யாவும் ப.சிதம்பரத்துக்கு மட்டுமின்றி, செப்டம்பர் 16-ல் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.
ஜனவரி, மார்ச், மே, ஜூலை மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ப.சிதம்பரத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பர்.
மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில், நிதியமைச்சருக்கு வேலைப் பளு அதிக அளவு இருக்கும். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட இயலாது. உடல்நலன் மேன்மையுடன் இருக்கும்.
அதேநேரத்தில், அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயினும், அதிலிருந்து மீண்டு வழக்கம்போல் செயல்பட விரைவில் ஆயத்தமாகிவிடுவார்.
இந்த மாதத்தைப் பொறுத்தமட்டில், ப.சிதம்பரத்தின் செய்கைகளுக்கும், முடிவுகளுக்கும் கிடைக்கக்கூடிய ஆதரவும் , எதிர்ப்பும் சரிவிகிதத்தில் இருக்கும். எதிர்ப்புகளும், ஆதரவுகளும் அனைத்து திசைகளில் இருந்து வரும். அதேவேளையில், விமர்சனங்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்வவதில் வெற்றியும் காண்பார்.
நிதியமைச்சருக்கு நிம்மதி தரும் எண்கள் : 2, 5 மற்றும் 7
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|