|
| சல்மான் கான் | |
பிறந்த தேதி : டிசம்பர் 27, 1965 இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். நடிப்புத் திறனும், வசீகரத் தோற்றமும் ஒருங்கே கொண்ட இவர், தனது செய்கைகளால் ஊடகத்துக்கு அவ்வப்போது தீனி போடுபவர்.
அனைவரிடமும் எளிதில் பழகும் இவருக்கு, நெருங்கிய நட்பு வட்டம் குறைவுதான். அதேநேரத்தில் தனக்கு மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமின்றி, பலருக்கும் இவர் திறந்த புத்தகமாக இருப்பார்.
தனது உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்திவிடும் பண்பு கொண்ட இவருக்கு, அதுவே சிலநேரங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கலைகளில் ஈடுபட்டு பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதுடன், பல்வேறு கலை நிகழ்வுகளைத் தேடிச்சென்று மகிழும் ரசனைத் தன்மையும் மிகுந்தவர்.
தான் புரிகின்ற தொழிலில் மேன்மையுடன் திகழ்ந்து, வையகம் போற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்ற முனைப்புடன் எந்த ஒரு காரியங்களிலும் ஈடுபடும் இவர், அவ்வப்போது தனது எதிர்மறை எண்ணங்களால் துவண்டு விடுவார். ஆயினும் எளிதில் புத்துணர்வு பெற்று மீண்டுவிடும் ஊக்கமும் இவரிடம் உண்டு.
இவையாவும் சல்மானுக்கு மட்டுமின்றி டிசம்பர் 27-ல் பிறந்த அனைவருக்குமே பொருந்தும் பொதுவான குணநலன்களே.
டிசம்பர் இறுதி, ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில் பிறந்தவர்கள் சல்மானுக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர்.
மார்ச் மாதத்தைப் பொறுத்தமட்டில், சல்மானுக்கு பல்வேறு புதிய அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உண்டாக்கும். பயணங்களின் மூலம் பயன்கள் பலவற்றைப் பெறச் செய்யும் மாதம்.
தொழில் ரீதியாக வெற்றி பெறுவதற்கு உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆயினும், தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு அமைதிக்காக ஏங்க வேண்டிவரும். மொத்தத்தில், மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில், பாசிட்டிவ் நிகழ்வுகள் சல்மானை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.
சல்மானுக்கு சந்தோஷம் தரும் எண்கள் : 3 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|